திருச்செங்கோடு, நவ.5: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கோனூர் கந்தம்பாளையம் குடித் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(65). கூலி தொழிலாளியான இவர், சொந்த தேவைக்காக பழங்களைக் கொண்டு சிறிய அளவில் ஊறல் போட்டு தனது வீட்டு குக்கரில் சாராயம் காய்ச்சி வந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், முதுநிலை காவலர்கள் ஜெய்கணேஷ், தீனதயாளன், கந்தசாமி ஆகியோர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும், மாரிமுத்துவின் வீட்டில் நடத்திய சோதனையில், குக்கர் மூலம் காய்ச்சிய சாராயத்தை ஒரு கேனில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement


