Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் விடிய, விடிய தத்தளித்த பெயிண்டர் உயிருடன் மீட்பு

சேந்தமங்கலம், நவ.3: சேந்தமங்கலம் அருகே 60 அடி கிணற்றில் விழுந்து, விடிய விடிய தத்தளித்த பெயிண்டர் உயிரோடு மீட்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(40). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, இருட்டில் கால் தவறி அங்குள்ள 60 அடி ஆழ விவசாய கிணற்றில் விழுந்து விட்டார். கிணற்றுக்குள் இருந்த மரக்கிளையை பிடித்துக் கொண்டு, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் சத்தம் போட்டவாறு இருந்தார்.

ஆனால், அந்த பக்கம் யாரும் செல்லாததால், விடிய, விடிய கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது, கிணற்றுக்குள் சரவணன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சேந்தமங்கலம் போலீசார், நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் வந்து, சரவணனை மீட்டனர். பின்னர், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.