Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் ஜவுளி விற்பனை களைகட்டியது; போலீசார் தீவிர கண்காணிப்பு

சேலம், நவ.2: தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், சேலம் கடைவீதியில் பொதுமக்கள் புத்தாடை வாங்க குவிந்து வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால், புத்தாடை வாங்க அதிகளவில் மக்கள் கடைவீதியில் குவிந்தனர். சேலம் கடைவீதி, முதல்அக்ரஹாரம், தேர்நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு, 5 ரோடு பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சேலத்தில் ஏழைகளின் ஜவுளி உலகம் என்று அழைக்கப்படும் சிசி ரோடு, ஏஏ ேராடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் நேற்று காலை வழக்கத்தைவிட வியாபாரம் 30 முதல் 50 சதவீதம் அதிகமாக இருந்தது. நேற்று காலை, ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அமோகமாக இருந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், மாநகர போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகரும் வாகனங்கள் மூலம் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடைவீதி, 5 ரோடு, அருணாசல ஆசாரி தெரு உள்ளிட்ட 10 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகர போலீசார் கூறுகையில், `இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் வாட்ச் டவர்கள் அமைத்து, தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தீபாவளி பாதுகாப்பு பணியில் 500 போலீசாரும், 150 ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்,’ என்றனர்.

+