Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி தீ விபத்து

திருச்செங்கோடு, ஜூலை 2: சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான லாரியை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் குமார்(35) என்பவர் மன்னார்குடி அருகே வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு, திருச்செங்கோடு அருகேயுள்ள ஆன்றாபட்டிக்கு நேற்று வந்துள்ளார். இவருடன் வைக்கோல் பாரத்தை இறக்க 4 தொழிலாளர்களும் ெசன்றுள்ளனர். இடையார்பாளையம் பகுதியில் லாரி வந்த போது, சாலையின் குறுக்கே இருந்த உயர் அழுத்த மின்கம்பி வைக்கோலில் உரசியதில் தீப்பிடித்தது.

இதை பார்த்த பொதுமக்கள் கூச்சல் போட்டதையடுத்து, டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி தீயை அணைக்க முயற்சித்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற திருச்செங்ேகாடு தீயணைப்பு துறையினர் வைக்கோலை வெளியே எடுத்து விட்டு, சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்த டிரைவர் குமாரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.