மார்த்தாண்டம், அக்.30: மார்த்தாண்டம் கீழ பம்மம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(61). கூலித்தொழிலாளி. அவரது மனைவி குமாரி(55). இந்த நிலையில் குமாரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற குமாரி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனால் எங்கும் கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.


