Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

களியக்காவிளை அருகே வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்

மார்த்தாண்டம், அக்.30: களியக்காவிளை அருகே பொன்னப்ப நகரை சேர்ந்தவர் தங்கபாய் (68). இவரது மகள் ஜெபா(43). இவருக்கு குமார் என்பவருடன் திருமணமாகி மருதங்கோடு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் தங்கபாய் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கபாய் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் திடீரென தங்கபாயை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார்.

தாக்குதலில் படுகாயம் அடைந்து தங்கபாய் சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெபா அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீசார் வீட்டில் புகுந்து மூதாட்டியை தாக்கிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.