நாகர்கோவில், அக்.30:சுங்கான்கடையில் சமூக பணியாற்றிய அருட்தந்தை ஜேம்ஸ் தொம்பர் நினைவாக பாதர் ஜேம்ஸ் தொம்பர் கத்தோலிக்க பார்மஸி கல்லூரி வருகின்ற நவம்பர் 4ம்தேதி(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க செவிலியர் கல்லூரி வளாகத்தின் அருகில் திறக்கப்பட உள்ளது. குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அர்ச்சித்து இறைவேண்டல் செய்து திறந்து வைக்கிறார்.
குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவில் மறைமாவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி. சேவியர் பெனடிக்ட், மறைமாவட்ட நிதி காப்பாளர் அருட்பணி ஜெயக்குமார், மறைமாவட்ட செயலர் அருட்பணி அந்தோணிமுத்து, மறைவட்ட முதல்வர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள், கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி, மார்னிங் ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி, புனித சவேரியார் நர்சிங் கல்லூரி, புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை, Fr. ஜேம்ஸ் தொம்பர் இயற்கை முழு நல வாழ்வு மையம், பொன்மலை தியான மையம் இயக்குநர், தாளாளர்கள், நிதிக்காப்பாளர்கள், முதல்வர்கள், பணியாளர்களுடன் இணைந்து பார்மஸி கல்லூரி தாளாளர் அருட்பணி டோமினிக் சாவியோ, நிதி காப்பாளர் அருட்பணி ஜாண் பிரான்சிஸ், புனித சவேரியார் மருத்துவமனை தாளாளர் சார்லஸ் விஜியு, புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், மார்னிங் ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் சேகர் மைக்கேல், அருள் தந்தை ஜார்ஜ் ஜெசஸ், கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா, மற்றும் பணியாளர்கள், மாணாக்கர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
இது குறித்து கல்லூரி தாளாளர் அருட்பணி டோமினிக் சாவியோ கூறியது, தமிழகத்தில் இயங்கி வரும் கத்தோலிக்க கல்லூரிகளில் முதன்முறையாக பார்மஸி கல்லூரி குழித்துறை மறைமாவட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. எங்களது கல்லூரியில் சிறப்பாக அதிநவீன ஆய்வகங்கள், நூலக வசதி, தங்கும் விடுதி வசதி, வாகன வசதி, கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி செல்வதற்கு மருத்துவ கம்பெனி வசதிகள், தகுதிவாய்ந்த அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளனர்.
தற்போது 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு கலந்தாய்வு இடங்களுக்கு நடைபெற்று வருகின்றது. குமரி மாவட்ட மக்கள் இந்த வாயப்பை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.


