Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொல்லங்கோடு அருகே சூதாடிய 8 பேர் கைது

நித்திரவிளை, ஜூன் 9: கொல்லங்கோடு அருகே மேக்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து எஸ்.ஐ. சண்முக கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு எஸ். ஐ. ஜெபமணி, ஏட்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுரேஷ், சுஜன், ஜெனிபர், பிரதாப சந்திரன், வினோத், நெல்சன், ரவி, ராமகிருஷ்ணன் ஆகிய 8 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.