சீர்காழி, ஆக. 21: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட வி.என்.எஸ் நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.25.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தினை மாவட்ட கலெக்டர்.காந்த், குத்து விளக்கேற்றி, திறந்து வைத்து பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார்கோயில் வட்டாரங்களில் தற்போது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக மதிப்புக் கூட்டும் மையங்கள் கலெக்டர் ஒப்புதலுடன் வங்கி கடன்கள் பெற்று, கட்டுமான பணிகள் சம்மந்தப்பட்ட பயனாளி மூலம் கட்டப்பட்டு வேளாண் பொறியியல் துறையின் அனுமதி பெற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த மதிப்பு கூட்டு மையத்தில், சிறுதானியங்களான கம்பு, தினை, சாமை, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், சீர்காழி நகரமன்ற தலைவர். துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்). சுப்பையன், தோட்டக்கலை துணை இயக்குநர். திலிப் வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் .குமனன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்.லியோ மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement



