Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குறுவை நெற்பயிர் ஏக்கருக்கு ரூ. 15,000 நிவாரணம்கோரி கலெக்டர் அலுவலகம் பூட்டு

நாகப்பட்டினம், ஆக. 21: தமிழக அரசு தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் 4 மணி நேரம் அலுவலகம் பூட்டப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் நாகை மாலி முன்னிலை வகித்தார். தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட குருவை நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி பயிர் கடன் முழுவதையும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாறாக தமிழக அரசு கட்டுப்பாட்டில் பயிர் காப்பீடு நிறுவனத்தை அமைக்க வேண்டும். விவசாய வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு, கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நாகப்பட்டினம் நாகூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.

ஆனால் அதையும் மீறி

கலெக்டர் அலுவலக பிரதான வாயில் முன்பு அமர்ந்தனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கதவுகளை மூடினர். கதவுகளை திறந்து கொண்டு அலுவலகம் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். நிவாரணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் வர வேண்டும் என கட்சியினர் கூறினர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்கிறோம் என கூறினார். ஆனால் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தாமல் கலைந்து போக மாட்டம், கைதும் ஆக மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர்அலுவலக பிரதான கதவுகள் காலை 11 மணி முதல் 2 மணி வரை 4 மணி நேரம் மூடியிருந்ததால் பொது மக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.இதையடுத்து ஆய்வு தொடர்பாக வெளியில் சென்றிருந்த கலெக்டர் பிரவீன்குமார், அலுவலகம் வந்தார். எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா தலைமையில் ஆயுத்தப்படை பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீசார் கலெக்டர் தலைமையில் 30 நிமிட பேச்சுவார்த்தை நடைபெற்றப்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

பணிகள் பாதிப்பு

தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரண நம் தமிழக அரசு வழங்க கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக எதுவும அசம்பாவித சம்பவம் நடைபெற்றுவிடக்கூட்டாது என்பதற்காக போலீசார் கலெக்டர் அலுவலக பிரதான கதவுகள் பூட்டப்பட்டது. காலை 11 மணி முதல் 2 மணி வரை 4 மணி நேரம் கதவுகள் மூடியிருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியவில்லை.