தரங்கம்பாடி, அக். 30: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்-சங்கரன்பந்தல் செல்லும் சாலையில், கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளால் விபத்துகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தரங்கம்பாடி வட்டம் பொறையார் புதிய பேருந்து நிலையம் பிரதான சாலையின்வழியாக அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம் பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்வோர் இந்த சாலையின் வழியாகவே பயணிக்க வேண்டும்.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பொறையார் புதிய பேருந்து நிலையம் பிரதான சாலை மற்றும் ஆடிப்பாடி, சங்கரன்பந்தல் திருக்களாச்சேரி பிரதான சாலையில் ஏராளமான மாடுகள், குதிரைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் கண்டபடி சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்துச் செல்வதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.


