கொள்ளிடம் அக் 30: கொள்ளிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கு ரத்ததான சேவையை பாராட்டி விருது. கடந்த 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் துளசேந்திரபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்இ கடந்த 202ம் ஆண்டிற்கான ரத்ததான முகாம்கள் அவசர ரத்ததானங்கள் வழங்கியதை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
ரத்தானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துளசேந்திரபுரம் கிளை நிர்வாகிகளுக்கு கேடயங்கள் சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்டத்திலேயே 2026 ஆம் ஆண்டுக்கு ரத்த தான சேவைக்கான பரிசு பெற்ற துளசேந்திரபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


