நாகப்பட்டினம், அக். 30: புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை நாகப்பட்டினத்தில் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருகே வடக்கு நல்லியான்தோட்டம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்த பேச்சியம்மாள் (58) புதுச்சேரி மாநில மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்து 300 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பேச்சியம்மாள் கைதுசெய்தனர்.


