Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பனை விதை நடும் விழா

மயிலாடுதுறை, அக். 29: பனை விதை நடும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர் சாலையோரங்களில் வசிப்பவர்கள் என தினமும் உணவு வழங்கி வருவதோடு எண்ணற்றசமூக சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில் இயற்கை வளம் மண் வளம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பனை விதை நடப்பட்டது,

திருவிடைக்கழி முருகன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டு தில்லையாடி ஆக்கூர் திருக்கடையூர் வரை ஆற்றுப்படுகையில் குளம் கரை சாலையோரங்கள் ஏரிக்கரை ஓரங்களில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்வு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்க தலைவர் ஆசிரியர் சரவணன், செயலாளர் தியாகராஜன், மற்றும் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் சங்கர், செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பனை விதை நடவுசெய்தனர்.