நாகப்பட்டினம், அக். 29: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட பொருளாளர் குமரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மனோகரன் விளக்க உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர்கள் சண்முகம், பக்கிரிசாமி, செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
ஓய்வூதியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை தாமதமின்றி அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அனைத்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜு நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து நன்றி கூறினார்.


