நாகப்பட்டினம், அக். 29: நாகை கடலில் குளித்த கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கடலில் சிக்கினர், இதில் ஒருவரை கடலோர காவல் படையினர் மீட்டனர். ஒருவரை தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹசன் தாலுகாவை சேர்ந்த 14 பேர் கடந்த 23ம் தேதி கர்நாடகாவில் இருந்து டெம்போ ட்ராவலர் வாகனத்தில் புறப்பட்டனர். இவர்கள் கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றனர்.
இதையடுத்து நேற்று நாகப்பட்டினம் புதிய கடற்கரைக்கு வந்தனர். அங்கு உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். இதில் கர்நாடகா மாநிலம் காந்தநல்லியை சேர்ந்த சாத்தூ (12), சம்மு (15), இந்தரேஷ் (45) ஆகிய 3 பேரும் கடல் அலையில் சிக்கிக்கொண்டனர். இவர்களை நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் போராடி சாத்து, சம்மு ஆகிய 2 பேரை மீட்டனர். இந்தரேஷ் தேடிவருகின்றனர். இதுகுறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


