Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு பள்ளிகளுக்கான தற்காப்புகலை போட்டி

சீர்காழி, ஆக. 27: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படுகின்ற, மயிலாடுதுறை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டிகளை, பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சுரேஷ் குத்துவிளக்கு ஏற்றிவைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் மோதினர். பள்ளி உடற்கல்வி இயக்குநர் சங்கர், பள்ளி ஆசிரியர்கள் அருள், ராஜா, முருகராஜ், ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர் அருள்செல்வம் செய்திருந்தார்.