மயிலாடுதுறை, ஆக. 29: மயிலாடுதுறை மாவட்டம், மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமனம் செய்வதை தடுத்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, விதி 24(1) மற்றும் (2)ன்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவினை (District Level Vigilance and Monitoring Committee) திருத்தி அமைத்திட புதியதாக உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமனம் செய்வதை தடுத்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆர்வம் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களுடன் விண்ணப்பத்தினை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் 2-வது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 08.09.2026-6 விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் 2-வது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகவும் அல்லது 04364. 290765 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.



