சீர்காழி, ஆக. 28: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நகரில் எஸ்பி சினேகா பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது சட்டம் ஒழுங்கு குறித்தும், போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் சார்லஸ் மற்றும் அதிரடி படை போலீசார் உடன் சென்றனர்.


