சீர்காழி, ஆக. 28:வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் நிதி அமைச்சர் மரியவில்சன் பாதயாத்திரையாக புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் அமைச்சர் பாதயாத்திரையாக சென்ற போது பொதுமக்கள் ஆங்காங்கே அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதி குறைகள், நீண்ட ஆண்டு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தும,நேரில் வலியுறுத்தினர். மேலும் தவெகவினர் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பும் அளித்தனர்.


