தரங்கம்பாடி, ஆக.28: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அருண் பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கணக்கில் வராத ரூபாய் 49,445 பறிமுதல் செய்து தொடர்ந்து சார் பதிவாளர் மகேஸ்வரியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.


