Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறையார் பகுதியில் மின் தடை

தரங்கம்பாடி, மே 28: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 30ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொறையார் மின் பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பொறையார், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி,

சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி, டிமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைகோவில், திருமெய்ஞானம், பிபிநல்லூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்ற தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.