Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி அருகே பரவையில் ரூ.1.16 கோடியில் காய்கறி விற்பனை கடைகள் திறப்பு விழா

நாகப்பட்டினம், பிப்.27: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பரவையில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான காய்கறி விற்பனை கடைகள் திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.

அதேபோல் வேளாங்கண்ணி அருகே பரவை சந்தையில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி பரவையில் காய்கறிகள் விற்பனை கடை திறப்பு விழா நடந்தது. நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன், இணை ஆணையர் ராஜாபருதி இளம்வழுதி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.