மயிலாடுதுறை, ஆக. 26: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நாளை(27ந்தேதி) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.



