நாகப்பட்டினம், ஆக. 26: நாகப்பட்டினம் அருகே 11 வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொரியர் சர்வீஸ் ஊழியர் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே கோவூர் புது தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (23). ஐடிஐ படித்த இவர் தற்போது தனியார் (பிலிப்காட் நிறுவனத்தில்) கூரியர் சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி, நாகப்பட்டினம் கடற்கரைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறினார். மாணவியின் தாய் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேம்பரசி விசாரணை நடத்தி போக்சோ வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



