சீர்காழி, அக். 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு வெடிக்கடை அமைக்க பலரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக தீபாவளி பண்டிகைக்காக வெடிக்கடை அமைக்க சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட வெடி கடைகளுக்கு அனுமதி கோரப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெடி கடை அமைய உள்ள இடங்களில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார். வெடிக்கடை அமைப்பதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வெடிக்கடை அமைக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என தற்காலிக வெடிக்கடை உரிமையாளரிடம் தெரிவித்தார்.


