Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைஞாயிறு பகுதியில் ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

வேதாரண்யம், அக். 23: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட விநியோகப்பொருட்களின் இருப்பு மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பழையாற்றங்கரையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் பார்வையிட்டு மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் பசுபதி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.