நாகப்பட்டினம், செப்.18: பெரியாரின் 148 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திக சார்பில் நாகப்பட்டினத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகப்பட்டினம் கோட்டை வாசலில் உள்ள பெரியார் சிலையில் நடந்த நிகழ்ச்சிக்கு திக மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை வகித்தார்.
செயலாளர் புபேஷ்குப்தா முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கவுதமன் மாலை அணிவித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். திமுக ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அனஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.


