Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாகப்பட்டினம், செப். 18: நாகப்பட்டினம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகப்படினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகப்பட்டினம் அருகே திருக்கண்ணபுரம் திருப்பாற்கடல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடந்த 2020ம் ஆண்டு தவறாக நடந்து கொண்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் நீதிபதி ராஜ்குமார் வழக்கை விசாரித்து ராஜசேகருக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.