கீழ்வேளூர், செப். 18: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கவேண்டும். டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மேகலா, மகேந்திரன், இளங்கோவன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


