Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

மயிலாடுதுறை, ஜூலை 18: மயிலாடுதுறையில் நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 5 கடைகளில் நகராட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, கடைகளில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அந்த கடைகளில் இருந்து சுமார் 2 டன் (2,000 கிலோ) எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.நகராட்சியால் தடை செய்யப்பட்ட இந்த ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.