Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேதாரண்யம், ஜூலை 18: வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புபோலீசார் நேற்று சோதனை மேற்கொண்டு அலுவலகத்தில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் ரூ.1,06,000 பணத்தை கைப்பற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் ஆறு பேர் கொண்ட லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்,

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் தாலுக்கா அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் சிக்கியது. போலீசார் அலுவலக பணியாளர்கள் தாலுக்கா அலுவலக வாசலில் நிறுத்தியிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலிருந்தும்ரூ.1,06,000 ரொக்கம் பறிமுதல் செய்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.