Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொள்ளிடம் அருகே மழையால் வீட்டின் தாழ்வாரம் இடிந்து விழுந்தது

கொள்ளிடம், மே 18: கொள்ளிடம் அருகே மழையினால் வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்ததில் வீட்டிலுள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமம் தங்கராசு மகன் கஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் முன்புற தாழ்வாரம் திடீரென இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்ததாலும், யாரும் அந்த வழியே செல்லாமல் இருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.