Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெற்றிப்பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: சீர்காழியில் 850 ஆட்டோக்கள் ஸ்டிரைக்

சீர்காழி, அக். 16: சென்னையில் வெற்றிப் பயணம் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மனமுடைந்து இரண்டு ஆட்டோ டிரைவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 850 ஆட்டோக்கள் இயக்காமல் ஆட்டோ உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இடுபட்டனர். நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதனால் சீர்காழி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழக அரசின் வெற்றிப் பயணம் இலவச பேருந்து திட்டத்தால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ கட்டணத்தை உயர்த்தவும் தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். ஆட்டோக்கள் இயங்காததால் பொதுமக்கள் வியாபாரிகள் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள்.