Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாகையில் பல்வேறு இடங்களில் மழை நீரை வடிய வைக்கும் பணி

நாகப்பட்டினம், அக். 16: நாகப்பட்டினம் நகர பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் நகர பகுதியில் மழை நீர் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டது. மழை காலத்திற்கு முன்பே வடிகால்களை தூர்வார முன்னேற்பாடு பணிகள் செய்யாத காரணத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதையடுத்து நகர்மன்ற தலைவர் மாரிமுத்து நாகப்பட்டினம் நகர பகுதியில் மழை நீர் தேங்கிய இடங்களை அதிரடியாக ஆய்வு செய்தார். பொக்ளைன் உதவியுடன் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் நகர பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வடிய வைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.