மயிலாடுதுறை, அக். 16: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22ம்தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் 22ம்தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


