Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கீழ்வேளூர் அருகே மின் கசிவால் கூரை வீட்டில் திடீர் தீ விபத்து

கீழ்வேளூர், ஜூலை 16: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த நெம்மேலி மேட்டு தெருவை சேர்ந்த சுப்ரவேல் மகன் செந்தில் இவர் வேலைக்குச் சென்ற நிலையில் அவரது வீட்டில் உள்ளவர்கள் ஆடு மேய்க்க சென்று இருந்தனர். இந்நிலையில் இவரது கூரை வீட்டின் மேற்கூரை திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இது குறித்து கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை முழுமையாக அணைத்தனர். இதில் செந்தில் வீட்டில் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்பட்டது. விசாரணையில் வீட்டின் மேல் பகுதியில் சென்று மின் கம்பிகளால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.