நாகப்பட்டினம், ஜூலை 16: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக நிலைநிறுத்தி, குற்றத் தடுப்பு, குற்றவாளிகளை விரைந்து கண்டறிதல், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துதல், விழிப்புணர்வு பணிகள் மற்றும் காவல்துறையின் மக்கள் சேவை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
+
Advertisement

