Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சீர்காழியில் கொட்டித்தீர்த்த கன மழை

சீர்காழி, அக். 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ய த்தொடங்கி நேற்று காலை முதல் மாலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் மழை நீர் வடியவே வழி இல்லாததால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இதனால் பொதுமக்கள் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர். தற்போது மேட்டூரில் திறக்கப்பட்டும் தண்ணீர் போதுமான அளவு வந்து சேரவில்லை. இதனால் பெருமளவில் விவசாயிகள் நடவு பணியை தவிர்த்து நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு மழை தேவைப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழையால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தோட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.