Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசு நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும்

காரைக்கால், அக். 15: புதுச்சேரி மாநிலத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை அரசே நேரடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் கூட்டுப் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் கூட்டுப் போராட்டக்குழுவின் காரைக்கால் மாவட்டக் கூட்டம் நடைபெற்ரது. காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் கன்வீனர் ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தார்.

இதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக சம்பவள்ம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், புதுச்சேரி மாநிலக் கூட்டுப் போராட்டக்குழு அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் காரைக்கால் மாவட்டத்திலும் நடத்துவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.