Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சீர்காழி மாவட்ட இசைப்பள்ளியில் தவில் ஆசிரியர் பணியிட மாற்றம் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜூலை 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு குரல் இசை, நாதஸ்வரம், தவில் பொம்மலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இசைப்பள்ளியில் தவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஹரிகரன் பெரம்பலூர் அரசு இசைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இசைப்பள்ளி மாணவர் - மாணவிகள் ஒன்று சேர்ந்து இசைப்பள்ளி முன்பு தவில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து தவில் ஆசிரியர் ஹரிஹரன் சீர்காழி இசை பள்ளியிலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது