மயிலாடுதுறை,அக்.14: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் 22ம்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மயிலாடுதுறை.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் மயிலாடுதுறை. மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு மயிலாடுதுறை. மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.


