கீழ்வேளூர்,அக்.14: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கூத்தூர் ஊராட்சி வண்ணான் குளத்தெருவில் உள்ள பனை மரத்தில் கதண்டுகள் (விஷ வண்டுகள்) கூடு கட்டி உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகளை அச்சுறுத்தி வந்தன. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜ சோழன் மேற்பார்வையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ரசாயன மருந்துகள் தெளித்தும், தீ வைத்தும் கதண்டுகளை அழித்தனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்து எந்த நேரமும் கழிவுநீர் பேருந்து நிலையத்தை சுற்றி தேங்கி நிற்கும். அங்குள்ள கழிவறையை சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது.


