Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரைக்கால் தெற்கு தொகுதியில் முதியோருக்கு போர்வை, காலணிகள்

காரைக்கால், ஜூன் 13: காரைக்கால் தெற்கு தொகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகளை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முதியோர் உதவித்தொகை பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உடனிருந்தனர்.