Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை, ஜூன்13: மயிலாடுதுறையில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த இம்மானுவேல் மகன் வீரமணி (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.