Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

நாகப்பட்டினம், செப்.11: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கீழக்காடு, குறவப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் மீதுவேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும், நீதிபதி ராஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.