Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சீர்காழியிலிருந்து விடிய விடிய திருச்சிக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

சீர்காழி, செப். 11: சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த சேமிப்புக் கிடங்கிலிருந்து லாரிகள் மூலம் 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நளினா உத்தரவின் பேரில் சீர்காழி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து விடிய விடிய 42 வேகன்களில் தொழிலாளர்கள் மூலம் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 42 வேகன்களில் மூட்டைகள் ஏற்றப்பட்ட பின்னர் சரக்கு ரெயில் திருச்சிக்கு சென்றது. இந்த பணியில் தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் கமலக்கண்ணன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.