Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் அருகே 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார்

நாகப்பட்டினம்,செப். 10: நாகப்பட்டினம் அருகே 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கல்லுகுடி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(31). கொத்தனார். இவர் கடந்த மே மாதம் 16ம்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில், உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் வீட்டில் யாரும் இல்லாத போது ராஜசேகர் கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்து உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம்தேதி அவரது தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.  இது குறித்து நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வேம்பரசி, ராஜசேகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.