Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நீண்ட காலம் பழகிய பெண், பேசாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

காரைக்கால், ஜூன் 11: காரைக்காலை அடுத்த சேத்தூர், பண்டாரவாடை, நாவலர் தெருவை சேர்ந்தவர் அருமை தாஸ்(39). கார் டிரைவர் ஆக வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், புதூர் பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை இல்லை. அருமைதாஸ் பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் கடந்த பல ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் குழந்தைகள் தற்சமயம் பெரியவர்களாக ஆகிவிட்டதால் அப்பெண் அருமைதாசிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அருமை தாஸ் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று பெட்ரோலை தன் மேல் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் இறந்துவிட்டார். நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.