காரைக்கால், அக். 10: காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவுப்பொருள்களில் இருந்து கலைப்பொருள்கள் தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 60 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பயன்பாடற்ற கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தி அழகிய கலைப்பொருள்களை உருவாக்கினர். நிகழ்ச்சிக்குப் பள்ளி முதல்வர் விஜயமோகனா தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருள்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் பள்ளி முதல்வர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அகோண்டி சூரிய சுந்தரி, விரிவுரையாளர்கள் வேலுசாமி, முத்துசாமி, மேகலா மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சேகரன், ரேணுகா, சாந்தி, சந்தியா, ரீகன், கரோலின், சிவநேசன், புவனேஸ்வரி, ராம்திலிப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியைப் பள்ளியின் நுண்கலை ஆசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.


